கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் (19) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலான 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்பிரகாரம், பேலியகொட, வத்தளை, ஜா – எல, கட்டுநாயக்க – சீதுவ ஆகிய நகர சபைப் பகுதிகளிலும், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும், கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுல் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
சப்புகஸ்கந்த மின்சார சபையின் அவசர திருத்தப் பணிகள் காரணமாக, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் தடைப்படுவதாலேயே, இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )