கடந்த (16) வியாழக்கிழமை நள்ளிரவு வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறு பேறுகளின்படி, நாடளாவிய ரீதியில் அதி கூடிய 198 புள்ளிகளைப் பெற்று, இவ்வாண்டு 5 மாணவர்கள் முதலாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
- கம்பஹா – சுமேதா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஷெனுல் அக்மீமன,
- கம்பஹா – கோதமி கல்லூரியில் பயிலும் ஹிருஷ கேஷான் விஜேசிங்க,
- அனுராதபுரம் – புனித ஜோசப் ஆண்கள் கல்லூரியின் நவங்க ஹன்ச ராஜ் பொன்சேகா,
- அலுபோமுல்ல – பண்டாரகம மகா பெல்லான ஆரம்பப் பாடசாலையின் ஹெவிடு ஹஸரல் பெரேரா,
- பதுளை – விஹார மஹாதேவி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி டப்ளியூ.எம். துலினி சாந்தினி.
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் மொத்தம் 200 மதிப்பெண்கள் உள்ள நிலையில், அதில் அதி கூடிய 198 மதிப்பெண்களை இந்த 5 மாணவர்களும் இம்முறை பெற்று, பாடசாலைகளுக்கு பேரும் புகழும் ஈட்டிக் கொடுத்துள்ளமையை, பெரும் சாதனையாகக் கருதுவதாக அதிபர்களும் ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )