இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமதக் கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சம – தலைவர் அல் – ஹாஜ், அஷ் – ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல் — காதிரி, அண்மையில் ஐக்கிய நாடுகள் சமாதானத் தூதுவர்கள் பேரவையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
ஹஸன் மௌலானாவை, ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுன்ஸிலின் ஆயுட்காலத் தலைவரும், பஹ்ஜதுல் இப்ராஹீமிய்யா அரபுக் கல்லூரியின் பணிப்பாளருமான அல் – ஹாஜ், அஷ் – ஷெய்க் தேசமான்ய ஹஸ்புல்லாஹ் அப்துல் காதிர் பஹ்ஜி, (16) வியாழக்கிழமை உத்தியோகப்பூர்வமாகச் சந்தித்து பொண்ணாடை போர்த்தி, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், “பஹன மீடியா” வின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ் – ஷெய்க் அப்துல் முஜீப், ஜாமிஉல் கைராத் மஸ்ஜித் பிரதம இமாம் அல் – ஹாஜ் அஷ் – ஷெய்க் ஏ.எச்.எம். மஹ்தி (ரவ்ழி) மற்றும் “நிவ்ஸ் நவ் மீடியா” வின் பிரதம ஆசிரியர் பியாஸ் முஹம்மத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கலாநிதி ஹஸன் மௌலானா, 20 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் சமயங்கள் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், சக வாழ்வு என்பனவற்றுடன் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காக, சர்வ மதத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )