ருஸைக் பாரூக்
சுல்தானுல் ஆரிபீன் செய்யீ தினா அஹ்மதுல் கபீரூர் ரிபாயி அவர்களின் 146வது ஆண்டு ரிபாயிக் கந்தூரி சங்கைகூறிய ரிபாய்க் மௌலானா அல் ஹாஜ் உ. பி. செய்யத் முஹம்மத் ஆசிக் தங்கல் அவர்களது தலைமேயில் செவ்வாய்யிக்ழமை கொழும்பு 12, முஹியத்தீன் பள்ளிவாசலீல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
கலீபத்துல் ரிபாயி மௌலவி ஏ.சி.ஏ. அஹமத் பலீல் மற்றும் ரிபாய்யா அரபிக் மகளிர் கல்லூரி அதிபர் மௌலவி அப்துல்லா ரவ்லி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இவ்நிகழ்வில் அஜ்வர்ட் அல் பாஸி அரபிக் கல்லூரி அதிபர் கலீபத்துஷ் ஷாசுலி அஹமத் சூபி (மஹ்லரி) அவர்கள் துஆ பிரார்த்தனை யடியினர்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அஹ்சன் ஆர் மரிக்கார், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி, கொழும்பு முன்னாள் பிரதி மேயர் எம்.டி.எம். இக்பால், உம்மு சவாயா பள்ளிவாசல் தலைவர் தேசபந்து மக்கி ஹாஷிம், பாலஸ்தீனத்தின் முன்னாள் தூதுவர் பௌஸான் அன்வர் மற்றும் ரிபாயி தரீக் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.