கொழும்பு
சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் விசேட தூதுவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் விசேட தூதுவரும், அரச சபை உறுப்பினருமான ஷென் யிகின் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நவம்பர் 18 முதல் 21 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மாலைத்தீவு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மொஹமட் முய்ஸுவின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நவம்பர் 15 முதல் 18 வரையில் மாலைத்தீவுக்கு செல்லவுள்ள ஷென் யிகின், மாலைத்தீவு விஜயத்தை தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனார்.
இவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அரசாங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் விசேட சந்திப்புகளையும் நடத்த உள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டதுடன், இதன்போது இருநாட்டு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தார்.
Nice