- கண்டியில் தீனிய்யா (பழைய மாணவர் சங்கம்) ஆலிம்களின் ஒன்று கூடலில் அல் ஆலிம் முனவ்வர் தீனி
- பாணந்துறை – பள்ளிமுல்லை, தீனிய்யா (பழைய மாணவர் சங்கம்) ஆலிம்களின் ஒன்று கூடல் நிகழ்வு, கண்டி – மர்கஸ், லைன் ஜும்ஆப் பள்ளிவாசலில், அகில இலங்கை ஜம் – இய்யத்துல் உலமா கண்டி மாவட்டக் கிளை பொதுச் செயலாளர் அல் ஆலிம் ஏ.எல். அப்துல் கfப்fபார் (தீனி) தலைமையில் சனிக்கிழமை இடம்பெற்றது.
- இந்நிகழ்வை, தெஹிவளை – “ஹை அதுல் குர்ஆன்” மேற்படிப்பு மாணவர் அல் ஆலிம் எம்.என். அப்துல்லாஹ் (தீனி) கிராஅத் முழங்கி ஆரம்பித்து வைத்தார்.
- நிகழ்வில், கண்டி – fபுர்கானிய்யா தாருல் உலூம் ஆசிரியர் அல் ஆலிம் எம்.ரீ.எம். இக்ராம் (தீனி) வரவேற்புரையையும்,
- அல் ஆலிம் ஏ.எல். அப்துல் கfப்fபார் (தீனி) தலைமை உரையையும் நிகழ்த்தினர்.
- குருநாகல் – சியம்பளாகஸ்கொட்டுவ, நூரிய்யா அரபுக் கல்லூரி அதிபர் அல் ஆலிம் எஸ்.டி.எம். முனவ்வர் (தீனி) இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது,
- ஒரு கல்லூரியின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழும் பழைய மாணவர்களை ஒன்று சேர்க்கும் பணி, மிக நீண்ட நாட்களாக எமது கனவாகவே இருந்து வந்தமை நாம் எல்லோரும் அறிந்ததே.
- அந்தக் கனவு நனவாகிய இத்தருணத்தில் நாம், அளவிலா ஆனந்தம் அடைவதுடன், எமது அக்கனவை நனவாக்கிய பெருமை நமது கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்களையே சாரும். அத்துடன், இதுவரை எம்மோடு இணைந்து பாடுபடும் பழைய மாணவர்கள், இந்நிகழ்வை சிறப்பாகச் செய்து முடிக்க ஒத்துழைப்புக்களை நல்கியவர்கள் மற்றும் கால நிலையைக் கருத்திற் கொள்ளாது நேர காலங்களை ஒதுக்கி, எமது அழைப்பை ஏற்று வெகு தூரத்தில் இருந்து இந்த ஒன்று கூடலுக்காக வருகை தந்துள்ளவர்கள் அனைவரையும் நன்றி உணர்வோடு நினைவு கூறுகின்றோம்.
- எமது கல்லூரியினது வளர்ச்சிக்கும் எங்களது எதிர்கால நலனுக்காகவும் தீனிய்யா நிர்வாகிகள் அரும் பாடுபட்டு உழைத்து வருகின்றார்கள். சுமார் எட்டு அல்லது பத்து வருடங்களாக எம்மிடமிருந்து எதுவித பொருள் உதவியோ பண உதவியோ பெறாமல் முற்றிலும் இலவசமாகவே எமது கல்விக்கான அனைத்துத் தேவைகளையும் வசதிகளையும் நிறைவேற்றித் தந்திருக்கின்றார்கள். இதற்காக நாம் அவர்களைப் புகழ்வதோடு, காலாகாலம் என்றுமே அவர்களுக்கு நன்றியுணர்வு உள்ளவர்களாக இருப்பதற்கும் கடமைப்பட்டுள்ளோம்.
- நாம் ஒருபோதும் நிர்வாகிகளுக்கு எதிராகவோ அல்லது கல்லூரி ஆசிரியர்களுக்கு மாற்றமாகவோ செயற்பட்டதில்லை. இனிமேலும், அவ்வாறான எண்ணங்கள் எதுவுமே எம்மிடம் துளியளவும் இல்லை என்பதையும் ஆணித்தரமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இதுபோன்ற ஒன்று கூடல்களை, கல்லூரியில் நடத்துவதே சிறந்தது. என்றாலும், கல்லூரியில் பழைய மாணவர் சங்கம் ஒன்று இதுவரையில் இயங்காததினால் தான், கல்லூரிக்கு வெளியே இவ்வாறானதொரு ஒன்று கூடலை முதன் முறையாக நடத்துவதற்கு எம்மைத் தூண்டியது” என்று குறிப்பிட்டார்.
- தொழிலதிபர் அல் ஆலிம் ஏ.எம். மர்ஸூக் தீனியின் உரை, ஆலியா ஹஜ் – உம்ரா சேவை உரிமையாளர் அல் ஆலிம் எஸ்.ஐ. மஸ்ஊத் தீனியின் கஸீதா, அகில இலங்கை ஜம் – இய்யத்துல் உலமா கேகாலை மாவட்ட ஹிங்குலோயா கிளையின் தலைவர் அல் ஆலிம் எம். என்.எம். அன்fபஸ் தீனியின் நிர்வாக அறிக்கை சமர்ப்பிப்பு, அல் ஆலிம் ஆர்.எம். எம். ஏ.ஜீ. ஸலாஹுத்தீன் தீனியின் நன்றியுரை, அல் ஆலிம் ஏ.எஸ். ஜஃபர் தீனியின் துஆப் பிரார்த்தனை என்பனவற்றுடன் இந்த ஒன்று கூடல் நிகழ்வு, ஸலவாத்துடன் இனிதே நிறைவு பெற்றது.
- தீனிய்யா பழைய மாணவர்களது நட்பு ரீதியிலான சிநேக பூர்வ இச்சிறப்பு ஒன்று கூடலில், கருத்துப் பரிமாறல் மற்றும் நிர்வாகத் தெரிவு ஆகியனவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
- இதன்போது, கல்லூரியிலிருந்து 1971 முதல் 2022 வரை பட்டம் பெற்று வெளியாகிய தீனிய்யா ஆலிம்களில், இதுவரை 273 பேர் மாத்திரமே பழைய மாணவர் சங்கத்தில் பதிவுகளைப் பெற்றுள்ளதாகவும் எனவே, நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய அனைத்து பழைய தீனியாக்களையும் கட்டம் கட்டமாக ஒன்றிணைத்து, இச்சங்கத்தில் பதிவிட்டுக் கொள்வதற்கான மும்முர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், புதிய நிர்வாக சபையின் பொதுச் செயலாளர் அல் ஆலிம் எம்.என். எம். அன்fபஸ் (தீனி) தெரிவித்தார்.
- ( ஐ. ஏ. காதிர் கான் )
November 16, 2023
0 Comment
270 Views