அஷ்ரப் ஏ சமட்
கொழும்பில் உள்ள ஈரான் கலாச்சார நிலையத்தின் அனுசரனையுடன் பலஸ்தீன் மக்களது கஸ்டங்கள். அவர்களுக்கு இளைக்கும் கொடுமைகள் . பலவந்தமாக பலஸ்தீன் நாட்டினைப் பிடித்து அங்கு நடைபெறும் கொடுமைகள் ,கடந்த கால நிலைமைகள் அடங்கிய கண்காட்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி கொழும்பு 2 சிலேவ் ஜலன்ட். வேக்கந்த ஜூம்ஆப் பள்ளிவாசலில் மு.ப.11.00 மணி வரை நடைபெறும்
ஜூம்ஆத் தொழுகை முடிந்து இஸ்ரேலைக் கண்டித்து கண்டனப் பேரனியும் பள்ளிவாசல் முன்றலில் நடைபெறும். இந் நிகழ்வினை தெளிவுபடுத்தும் ஊடக மாநாடு இன்று 15 மு.ப.10.00 இலங்கைக்கான ஈரான் நாட்டின் துாதுவர் கலாநிதி அலிரேசா தெல்கோஸ் தலைமையில், ஈரான் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இம் ஊடக மாநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இல்யாஸ், முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் அஹமத் முனவர், ஈரான் கலாச்சார கவுன்சிலர் கலாநிதி பி. மூசாமி கொட்டுரசா, வேகந்தை பள்ளிவாசல் தலைவர் பசீர் லத்தீப், செயல ளர் ,நசிம் நயிம் சமூக செயற்பாட்டாளர் சிராஸ் யுனுஸ், அகதியா பாடாசலை அதிபர் சிப்லி ஹாசீம் ஆகியோறும் ஊடக மாநாட்டில் பலஸ்தீன் சார்பாக கருத்துக்களைத் தெரிவித்தனர்.