கொழும்பு
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று நவம்பர் (13) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களில் நவம்பர் (13) முதல் 5 நாட்களுக்கு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.