ஏ.எஸ்.எம்.ஜாவித்
கொழும்பு மாவட்ட மஸ்ஜிதுகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்டத்தில் தமது சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 182 பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் பிரதிநிதிகளுக்கான நிருவாக விடயங்கள், வக்பு சட்ட நடைமுறைகள் தொடர்பான கருத்தரங்கு ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை(12) கொழும்பு 07 இல் உள்ள விளையாட்டு அமைச்சின் டங்கன் வைற் மண்டபத்தில் சம்மேளனத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்டீன் தலைமையில் இடம் பெற்றது.
செயலாளர் அப்துல் கரீம், பொருலாளர் பெரோஸ் அஹமட், றிஸான் ஹூஸைன் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவின் வழிநடத்தலில் இடம் பெற்ற நிகழ்வில் சுமார் 450 க்கும் மேற்பட் நம்பிக்கiயாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான பலஸ்தீன் நாட்டுத் தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச்.ஸெய்த் கலந்து கொண்டிருந்தார்.
பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தின் அஸ்ஸெய்க் அஹார் முஹம்மத், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் அஸ்ஸெய்க் இர்பான் மொஹமட், வக்பு நியாய சபையின் தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான சிரேஸ்ட சட்டத்தரணி கலாநிதி அப்துல் மஜீத், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அலா அஹமட், சட்டத்தரணி மாஸ் யூசுப், சிரேஸ்ட ஊடகவியலாளர் அமீன் இஸடீன், சிரேஸ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது வரவேற்புரையை மாளிகாவத்தை மஸ்ஜித் சம்மேளனத் தலைவர் அஸ்ஸெய்க் சியாம் அஸ்கர் நிகழ்த்தினார், விசேட துஆப் பிரார்த்தனையை மௌலவி சுக்கூர்டீன் மேற்கொண்டார் நன்றியுரையை சம்மேளனத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்டீன் வழங்கினார்.
பலஸ்தீன் மக்களுக்காக அமைதியும் சமாதானமும், பாதுகாப்பும் வேண்டி விசேட துஆப் பிரார்த்தனையும் இடம் பெற்றது.
November 12, 2023
0 Comment
267 Views