தமிழ் மாதமான ஐப்பசி 26-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருகிறது.பொதுவாகவே அமாவாசை அன்று தான் தீபாவளி வரும். ஆனால் ஒரு சில வருடங்கள் அமாவாசைக்கு முதல் நாளே தீபாவளி வரும். இந்த வருடம் அமாவாசைக்கு முந்தைய நாள் தீபாவளி வருகிறது. தீபாவளி அன்று புத்தாடை அணிதல், பட்டாசு வெடித்தல், இனிப்பு சுவைத்தல் போன்றவை எப்படி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறதோ, அதே போல அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் எனப்படும் எண்ணெய் தேய்து குளியல் செய்வது முக்கியம் ஆகும். தீபாவளி அன்று அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிக்குள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.மேலும் தீபாவளி பண்டிகையின் போது ஏழை, எளியோருக்கு, ஒருவேளை உணவு கூட சரியாக கிடைக்காதவர்களுக்கு முடிந்த வரை புத்தாடை தானமும், இனிப்பு மற்றும் உணவு தானமும் செய்தால் அந்த மகாலட்சுமியின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
November 12, 2023
0 Comment
274 Views