ஏ.எஸ்.எம்.ஜாவித்
மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம், வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் வவுனியா சிறி கந்தசாமி கோவில் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய தீபாவளிப் பண்டிகை நாளை பி.ப.3.30 மணிக்கு வவுனியா சிறி கந்தசாமி கோவில் மண்டபத்தில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ய. அநிருத்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர், அமைச்சின் செயலாளர், வவுனியா மாவட்ட செயலாளர், அரச அதிகாரிகள், இந்து குருமார்கள், வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் பரிபாலன சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.