கொழும்பு
இலங்கை பரீட்சைத் திணைக்ளத்தினால் நடாத்தப்படும் 2023 ஆம் ஆண்டிற்கான அஹதிய்யாப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளதென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இசட். ஏ.எம். பைசல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த அஹதிய்யா இறுதிச் சான்றிதழ் பரீட்சை சம்பந்தமான குறிப்புகள் மற்றும்
அறிவுறுத்தல்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்படும். மேலும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இணையத்தளம் (www.muslimaffairs.gov.lk) ஊடாகவும் அறிவிக்கப்படவுள்ளது.
இணையவழி மூலமாக மாத்திரம் கோரப்படவுள்ள விண்ணப்பங்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 09.00 மணி முதல் 27 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 09.00 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
இது சம்பந்தமான அறிவுறுத்தல்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பதிவு செய்யப்பட்ட அஹதிய்யாப் பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விபரங்களைப் பெறுவதற்கு, “பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 180, ரீ.பி. ஜாயா மாவத்தை, கொழும்பு 10.” என்ற முகவரியில் அல்லது 011-2667909 / 011-2669994 என்ற தொலைபேசியூடாகத் தொடர்பு கொள்ளவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது