- ஐ. ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர் ) அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற அதிபர் தரம் – 3 (SLPS – 111) போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுள், கிட்டத்தட்ட 10,000 ற்கும் மேற்பட்டவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு, அதில் சுமார் 4,715 ஆசிரிய ஆசிரியைகள் அதிபர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான அதிபர் நியமனக் கடிதங்கள், கல்வி அமைச்சினால் அண்மையில் (04.11.2023) அமைச்சில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
இதில், மேல் மாகாண கம்பஹா மாவட்டத்தில் கஹட்டோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி ரயீஸா ரஸ்ஸாக் (Raeeza Razak) மற்றும் கலாநிதி திருமதி இம்ரத் நுஸ்கி (Imrath Nusky) ஆகிய இரு ஆசிரியைகளும் இம்முறை அதிபர் நியமனத்திற்குத் தெரிவாகி, கஹட்டோவிட்ட மண்ணுக்கு பேரும் புகழும் சேர்த்துத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
November 11, 2023
0 Comment
223 Views