இஸ்மதுல் றஹுமான்
ஒருங்கமைப்பு குற்றச்செயலில் ஈடுபடும் பாதால உலகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆயுதங்களுடன் நீர்கொழும்பில் கைதுசெய்ப்பட்டுள்ளார்.
விசேட அதிரப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய
விசேட அதிரப்படை கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் வருன ஜயசுந்தரவின் கட்டளை மற்றும் ஆலோசனையில் மேல்மாகாண வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜே.ஆர்.சேனாதீரவின் வழிநடத்தலில் விசேட அதிரப்படையின் கோனஹேன முகாம் பிரதான பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க உட்பட உத்தியோகத்தர் குழுவினர்
நீர்கொழும்பு, குடாபாடு, மேரியன் பிலேஸ், 37 ம் இலக்க வீட்டை சுற்றிவலைத்து பரிசோதனை நடத்தினர்.
அங்கு வைத்து குற்றச் செயல் ஒன்றுக்கு ஆயத்தமாகவிருந்த ஒருவரை பொலிஸார் சந்தேகத்தில் கைதுசெய்தனர். இவர்
ஒருங்கமைக்கப்பட்ட குற்றச் செயலில் ஈடுபடுபவரான ஹுனடியன மஹேஸ் என்பவரின் உதவியாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கிருந்து மஹேஸுக்கு உரிய ரி 56 துப்பாக்கி ஒன்று, அதன் 3 மெகசின்கள், 87 தோட்டாக்கள், 8 மிமீ கைதுப்பாக்கி ஒன்று, சொட்கன்னுக்கு பாவிக்கும் 15 தோட்டாக்கள், 2 போலி வாகண இலக்கத்தகடுகள் என்பன கைபற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட 25 வயதான சந்தேக நபரை மேலதிக விசாரணைக்காக நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த ரி 56 துப்பாக்கி மிணுவன்கொட, கமன்கெதர பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்து தந்தையையும் மகனையும் வெடிவைத்து கொலை செய்ய பாவித்தது என தெரியவந்துள்ளது. மற்றும் தெற்கு, மேல் மாகணங்களில் மனிதப் படுகொலைக்கும் இதை பயன்படுத்தி உள்ளதாகவும் விசாரணையில் வெளிவந்துள்ளன.
குற்றச் செயல்களை செய்வதற்காக இவரை டுபாய் உள்ள மஹேஸின் இன்னொரு உதவியாலரான “சுன்னா” எனபரே வழிநடாத்தியுள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸார் சந்தேக நபருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவை பெற்று தடுத்து வைத்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.