- ஐ.ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர் ) மினுவாங்கொடை – கல்லொழுவை, அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வந்த எம்.எஸ்.எம். சஸ்ரின் மற்றும் எம்.யூ. பாயிஸ் ஆகியோர், அதிபர் தரம் – 3 ற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள், கல்வி அமைச்சினால் அண்மையில் (04.11.2023) வழங்கி வைக்கப்பட்டன.
ஆசிரியர் சஸ்ரின், அல் அமான் வித்தியாலயத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் ஆசிரியராக, பகுதித் தலைவராக, உதவி அதிபராக 11 வருடங்களாக (நியமனம் கிடைக்கும் வரை) தொடர்ந்தும் இவ்வித்தியாலயத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் எம். யூ. பாயிஸ், குறித்த பாடசாலையில் 2009 ஆம் ஆண்டு முதல் இஸ்லாம் பாட ஆசிரியராக 14 வருடங்களாகக் கடமையாற்றிவிட்டு, 2023 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் நீர்கொழும்பு – அல் பலாஹ் கல்லூரிக்கு இடம்மாற்றம் பெற்று, (நியமனம் கிடைக்கும் வரை) அங்கு தற்பொழுது இஸ்லாம் பாட ஆசிரியராக சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்களான எம்.எஸ்.எம். சஸ்ரின் மற்றும் எம்.யூ. பாயிஸ் ஆகிய இருவருக்கும், அல் – அமான் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியன, வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் உள்ளிட்ட ஆசிரியர் குழாம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
November 10, 2023
0 Comment
264 Views