ஹிங்குராக்கொட விமானப்படைத்தளத்தினால் மேற்கொள்ளப்படும் சமூக சேவை பணிகளில் ஒன்றாக பொலன்னறுவை ஆனந்தா மகளிர் கல்லூரியின் 71 வருட பழமைவாய்ந்த சுகலா தேவி மண்டபம் புதுப்பித்தல் மற்றும் ஒரு பழைய வகுப்பறை கட்டிடம் பிரதான நிர்வாக கட்டிடமாக புதுப்பிக்கப்பட்டு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களினால் பாடசாலையின் பாவனைக்காக கையளிக்கப்ட்டது.
விமானப்படை தளபதியின் பணிப்புரைக்கு இணங்க ஹிங்குராகொட விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் குணவர்தன அவர்களின் மேற்பார்வையின்கீழ் 10 வாரங்களுக்குள் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றபட்டது.