மினுவாங்கொடையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சகல வாகன சாரதிகளும், தமது வாகனங்களை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாகச் செலுத்துமாறு, மினுவாங்கொடை போக்குவரத்துப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறிப்பாக கார், வேன், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி ஆகிய வாகனங்களைச் செலுத்துவோர், கட்டுநாயக்க வீதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, பொலிஸார் விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
நேற்று (07) செவ்வாய்க்கிழமை மாலை பெய்த கனத்த மழை காரணமாக, மினுவாங்கொடை – கொட்டுகொடை பாலத்தின் நீர் மட்டம் மேலும் உயர்ந்து, அருகில் உள்ள வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், இந்த வேண்டுகோள் விடுக்கப்படுவதாக, போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
November 8, 2023
0 Comment
273 Views