ஐ. ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர் )
அல் ஹாஜ் லியாவுல் பௌஸினால், அவரது பெற்றோர்களின் ஞாபகார்த்தமாக, மினுவாங்கொடை – கல்லொழுவை பிரதேசத்தில் அமைந்துள்ள அல் – அமான் முஸ்லிம் மகா வித்தியாலய வளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய மூன்று மாடிக் கட்டடத் திறப்பு விழாவினை, எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவை நடத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று, (05) ஞாயிற்றுக்கிழமை இரவு, வித்தியாலய அதிபர் எம். ஆஸிம் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்விசேட கலந்துரையாடல் நிகழ்வில்,
பிரதேசத்திலுள்ள முஸ்லிம் அமைப்புகள், சங்கங்கள், புத்திஜீவிகள், நலன் விரும்பிகள் என, பல்வேறு துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்வின் இறுதியில், பழைய மாணவரும் கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசலின் ஆயுட்காலத் தலைவருமான அல் ஹாஜ் ஏ.எச்.எம். முனாஸ் தலைமையில், அல் – அமான் பழைய மாணவர் சங்கத்தின் முகாமைத்துவக் குழுவினரால், “அல்ஹாஜ் லியாவுல் பௌஸ்” கேட்போர் கூடத்திற்குத் தேவையான பெறுமதி மிக்க ஒரு தொகை மின் குமிழ்கள், பாடசாலை அதிபரிடம்
மண்டபத்தில் கையளிக்கப்பட்டது.