பிர்தௌசியா அஷ்ரப்
மார்க் ஸுக்கர்பெர்க்கை மட்டுமல்லாமல், வாரன் பஃபெட், லாரி எலிசன் உள்ளிட்ட உலக பணக்காரர்களை முந்தி ஐந்தாமிடத்தில் இருக்கிறார். ஸ்டீவ், மிக விரைவில் இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் தனது முன்னாள் முதலாளியான பில் கேட்சையே முந்தக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
உலகின் டாப் பணக்காரர்கள் வரிசையில் பில்கேட்ஸ் தவறாமல் இடம் பிடித்து விடுவார். ஆனால் பில்கேட்ஸின் முன்னாள் உதவியாளர் கூட உலகின் டாப் பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைவிட ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் இந்த நபர் ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பர்க்கை விட பணக்காரர் என்பதுதான். புளூம்பர்க் பில்லியர்ஸ் இண்டெக்ஸ்ஸின் படி பில்கேட்ஸின் முன்னாள் உதவியாளரான ஸ்டீவ் பால்மர் என்பவரின் சொத்து கணிசமாக அதிகரித்துள்ளது. தற்பொழுது உலகின் பணக்காரர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். மார்க் ஸுக்கர்பெர்க்கை மட்டுமல்லாமல், வாரன் பஃபெட், லாரி எலிசன் உள்ளிட்ட உலக பணக்காரர்களை முந்தி ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஸ்டீவ். மிக விரைவில் இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் தனது முன்னாள் முதலாளியான பில் கேட்சையே முந்தக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.