பிர்தௌசியா அஷ்ரப்
உலகக்கோப்பை தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளும் அரையிறுதி போட்டிக்கு முன்னேற இன்றைய போட்டியின் வெற்றி முக்கியம் என்பதால் போட்டி பரபரப்பாகவே ஆரம்பித்தது.
நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரச்சின் ரவீந்திராவின் அதிரடி மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன்னின் பொறுப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 50 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்களை மட்டும் இழந்து 401 ரன்களை குவித்தது. 402 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அப்துல்லா 4 ரன்னில் அவுட்டானார். ஆனால் அதற்கு பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆஷம் மற்றும் பக்கர் ஜமான் அதிரடியாக விளையாடினர்.