உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, சீனியின் விலை அதிகரித்துள்ளமையினால் ஒரு கோப்பை தேநீரின் விலையை 5 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரிசி, காய்கறி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளமையினால் உணவுப் பொதி, கொத்துரொட்டி மற்றும் ப்ஃரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையையும் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
November 5, 2023
0 Comment
232 Views