இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு
இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 68 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் ஊடகத்துறையில் சிறந்த பணியாற்றிய 10 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பணப்பரிசும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நவம்பர் முதலாம் திகதி நடைபெற்ற இவ்விழாவில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.ஜே.எம் . தாஜுதீன் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.
இவர் 1980 ஆம் ஆண்டு ‘தினபதி’ கொழும்பு நிருபராக
ஊடகத்துறைக்குப் பிரவேசத்து ‘தினகரன்’, ‘வீரகேசரி’, ஆகிய பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகவும் மற்றும் அரசாங்க தகவல் தினைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ( news.lk)பிரதம ஆசிரியராகவும் சுமார் நான்கு தசாப்கங்கள் பணியாற்றினார்.
இந்த விழாவில் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களை கௌரவித்தார்.
இந்த வைபவத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் திருமதி கோபால் பக்லே மற்றும் சார்க் நாடுகளின் பிரபல ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.