இர்ஷாத் ஏ. காதர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 4 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6:15 மணிக்கு கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் மன்றத் தலைவர் மனிதநேயன் இர்ஷாத் ஏ. காதர் தலைமையில் “மீலாத் வசந்தம்” நிகழ்வு நடைபெறும். இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்க, கலாநிதி எம்.ஏ.சி. மஹ்சூம், கலாநிதி எம். சி. பஹார்டீன், ராஜேந்திரன் செட்டியார் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்வின் விசேட அம்சமாக முன்னாள் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கவியரங்கு நடைபெறும். கவிஞர் திலகம் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் நினைவரங்கில் இடம்பெறும் கவியரங்கிற்கு கலாபூஷணம் தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமை தாங்குகிறார். இக்கவியரங்கில் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், வேதாந்தி சேகு இஸ்ஸதீன், பஷீர் சேகுதாவூத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், ஞானமுத்து ஸ்ரீ நேசன் மயில்வாகனம் திலகராஜா (திலகர்), முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸாக் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சமூக ஜோதி எம்.ஏ. ரபீக் சிறப்புரை வழங்க மருதமுனை கமால்தீன், மருதமுனை எஸ்.எச். எம். ஜஃபர், என் ரகுநாதன், மொரீன் ஜெனட், பர்ஹா அமீர்கான், அமீரா அமீர்கான், நாதியா மர்யம் ஆகியோர் இஸ்லாமிய கீதங்கள் இசைக்கின்றனர். திக்வல்லை சப்வான், மஹ்தி ஹசன் இப்ராஹீம், ஞெய் ரஹீம் சஹீட் ஆகியோர் கலந்து கொள்ளும் சஞ்சாரம் நிகழ்ச்சியும், ஸஹாரா இஸ்பஹான், இஸ்ஸா மர்யம் கலந்து கொள்ளும் கதை நேரம் நிகழ்ச்சியும் நடைபெறும். அனைவருக்கும் அனுமதி இலவசம்.
November 3, 2023
0 Comment
238 Views