பிர்தௌசியா அஷ்ரப்
இஸ்ரேலிய தரப்பிற்கு நேற்று பிற்பகல் ஏற்பட்ட கடுமையான இழப்பின் காரணமாக ஆத்திரம் கொண்ட இஸ்ரேல் காஸாவில் பொதுமக்கள் அதிகமாக செறிந்து வாழும் #ஜபைல் முகாம் பகுதி மீது இரவு முழுவதும் பாரிய குண்டு தாக்குதல் மேற்கொண்டது.
நேற்றைய தினம் அல்கஸ்ஸாம் போராளிகள், பதுங்கு குழிகளில் இருந்து வெளிக்கிளம்பி திடீர் திடீரென இஸ்ரேலிய ராணுவ கவச வண்டிகள் மீது ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டனர்.
குறித்த தாக்குதல் காரணமாக சுமார் 60ற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய படை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏராளமான கவச வண்டிகளும் தீ பிடித்து எரிந்தது.
எனினும் இழப்புகள் பற்றிய தகவலை வெளியிட வேண்டாமென அங்கு வலியுறுத்தப்பட்டதாகவும் அதில் பங்கேற்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
இதன் போது உரையாற்றிய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கையில் “காஸாவை தரைமட்டமாக்கி கைப்பற்ற வேண்டும்.
இதன் பின்னரே ஜபைல் பகுதியில் தாக்குதல் அதிகரித்துள்ளது.
இஸ்ரேலின் இந்த அறிவிப்பை தொடர்ந்து காஸாவில் உள்ள வெளிநாட்டவர்கள் எகிப்து ஊடாக வெளியேறுவதற்கு வீசாவுக்கு விண்ணப்பிக்க நீண்ட நெருக்கடி வரிசயில் நின்றனர்
எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலின் கோழைத்தனமான குண்டு வீச்சு அதிகரிக்குமென எதிர்பார்க்கலாம், எனினும் தரைமார்க்கமான நகர்வை முன்னெடுக்க இஸ்ரேல் இப்போதைக்கு தயாராகவே இல்லை.
மேலும் சிறுவர்கள் பெண்கள் முதியவர்களின் மரணங்கள் மற்றும் இடிபாடுகளில் சிக்குண்டு சிகிச்சை பெறுபவரின் விகிதம், சிகிச்சைக்கான பொருட்களின் தேவைகள் போன்றன அதிகமாகும்
இவ்வாறான நேரத்தில் ஏன் இன்னும் உலக நாடுகள் அமைதி காக்குகிறதோ தெரியவில்லை.