கொழும்பு
முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசியின் ஏற்பாட்டில் டுபாய் ஸைதா பவுன்டேஷனின் நிதியுதவியுடன் கொழும்பு நகரிலுள்ள பாடசாலைகளுக்கு புதிய கட்டடங்கள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
மட்டக்குளி சேர் ராசிக் பரீத் மகளிர் கல்லூரிக்கு 52 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு கட்டடமும், கொட்டாஞ்சேனை கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் வித்தியாலயத்துக்கு 9 இலட்சம் ரூபா செலவில் ஒரு கட்டடமும், மட்டக்குளி ஹம்ஸா வித்தியாலயத்திற்கு 34 இலட்சம் ரூபா செலவில் ஒரு கட்டடமும், கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு 32 இலட்சம் ரூபா செலவில் ஒரு கட்டடமும், கொழும்பு சென். செபஸ்டியன் சிங்களப் பாடசாலைக்கு 5 லட்;சம் ரூபா செலவிலும் ஒரு கட்டடமும் நிர்மாணிக்கப்படவிருக்கின்றன. இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெறும்.
இன்றைய தினம் 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வெவ்வேறு நிகழ்வுகளாக இந்த அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெறும். பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மாகாண சபை உறுப்பினர் நவுஸர் பௌசி ஆகியோர் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
November 2, 2023
0 Comment
303 Views