நக்ஷ்பந்தி சூஃபி வழியின் உலகத் தலைவரும், நக்ஷ்பந்தி தரிக்காவின் 41வது உலகத் தலைவருமான மௌலானா செய்தி ஷேக் மெஹ்மத் ஆதில் ரப்பானி அவ்ர்கள் நாளை புதன் நவம்பர் 1ம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்கிறார். அவர் கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளார்.
கடந்த காலங்களில் 13 தடவைகளுக்கு மேல் இலங்கைக்கு விஜயம் செய்த மௌலானா செய்தி ஷேக் நாசிம் அல் ஹக்கானியின் வாரிசாக நியமிக்கப்பட்ட பின்னர், ஷேக் மெஹ்மத்தின் இலங்கைக்கான 5வது சுற்றுப்பயணம் இதுவாகும்.
ஷேக் மெஹ்மத் பாரசீகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சூஃபி மிஸ்டிக் மற்றும் கவிஞரான மௌலானா ரூமி மற்றும் காதிரி சூஃபிவேயின் புகழ்பெற்ற ஷேக் அப்துல் காதிர் அல் ஜைலானியின் நேரடி வழித்தோன்றல் ஆவார்.
மௌலானா அவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையை நவம்பர் 3ஆம் திகதி கொழும்பு 6 வெள்ளவத்தை டபிள்யூ.. ஏ. சில்வா மாவத்தை மஸ்ஜித் மக்பூலில் நடத்துவார்.
மௌலானா செய்தி ஷேக் மெஹ்மத் ஆதில் ரப்பானி அவ்ர்களை சந்திக்க ஆர்வமுள்ளவர்கள் நக்ஷ்பந்தி மகாம், 24, 28வது லேன், ப்ளவர் ரோடு, கொழும்பு 7 என்ற முகவரியில் செய்யலாம். மேலும் தகவலுக்கு, கலீபா ஹாஜி இசாத் நிலார் 0773476806 அல்லது இந்திகாப் சுபர் 0718448448 ஆகியோரை அழைக்கவும்.