கொழும்பு
2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைதளத்தில் காணப்படும் விண்ணப்பத்திப்பத்தினூடாக தங்கள் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் முகவர்களைத் தேர்வு செய்கின்ற நேர்முகத் தேர்வு எதிர்வரும் நவம்பர் 02, 03, 04 ஆம் திகதிகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை ஹஜ் குழுவுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது.
மேற்படி நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்படும் முகவர்களின் விபரங்களை திணைக்களம் உத்தியோக பூர்வமாக வெளியிட்டதன் பின்னர், தெரிவு செய்யப்பட்ட ஹஜ் முகவர்களுடன் மாத்திரம் 2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை ஹஜ் குழு ஆகியன கேட்டுக் கொள்கின்றது.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தள முகவரியூடாகப் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
https://muslimaffairs.info/hajjapplications_24/create
Z.A.M. பைஸல்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
இலக்கம் 180, டி.பி.ஜயா மாவத்தை
கொழும்பு -10
தொலைபேசி : 0112667909 / 01122667901
Email : [email protected]