கொழும்பு
மின்சார கட்டண மீளாய்வு காலத்தை 03 மாதங்களாக குறைப்பதற்காக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முன்பு 06 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண மீளாய்வு செய்யப்பட்டது.
எனினும் பொது மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு குறித்த மீளாய்வு காலத்தை 03 மாதங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் 03 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டண மீளாய்வு மேற்கொள்ளப்படும்.
இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் நீர் மின் கணிப்புகளை வலுப்படுத்தும் வகையில் தற்போதைய பொதுக் கொள்கை வழிகாட்டுதல்களை திருத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோர் முன்வைத்த கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.