பாணந்துறை நகருக்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் இன்று ஒக்டோபர் (28) காலை 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ள நிலையில், தீயினால் பாரியளவில் விளையாட்டுப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரால் குறித்த பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
October 28, 2023
0 Comment
269 Views