கொழும்பு:
எமது நாட்டில் உள்ள 41 இலட்சம் பாடசாலை மாணவ மாணவியர்கள் அரசியல்வாதியின் முன் மண்டியிடும் பழக்கத்திலிருந்து விலக வேண்டும் என்றும்,
பிள்ளைகள் தங்கள் பெற்றோர்,
ஆசிரியர்கள்,மதத் தலைவர்கள் மற்றும் தங்களுக்கு நெருக்கமான பெரியவர்களிடமே மரியாதை காட்ட வேண்டும் என்றும்,
பழமைவாத சமூக அமைப்பின் அடிமைத்தனத்தின் அடையாளமாக இருப்பதால் அரசியல்வாதிகளிடம் அடிமைப்படுத்துவது தவறு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சகல பாடசாலைகளிலும் குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுவதாகவும், இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாமல் இருக்கும் விதமாக அரசியல்வாதிகள் செயல்பட வேண்டும் என்றும்,
திருட்டு,ஊழல், மோசடிகள் இன்றி நாட்டின் கல்விக்கு கூடிய பணம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.பிரபஞ்சம் பஸ் திட்டத்தின் கீழ் 80 அரச பாடசாலைகளுக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பாடசாலை பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு 389,200,000.00 ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது.
பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் 39 அரச பாடசாலைகளுக்கு 363 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.