ஐ. ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை/கட்டுநாயக்க செய்தியாளர் )
பௌத்த கிறிஸ்தவ முஸ்லிம் தமிழ் மதங்களுக்கு இடையில் பரஸ்பர நல்லெண்ணத்தை உருவாக்கும் குழு (மனுஷத் மிதுரோ சங்சதய) ஏற்பாட்டில், இரண்டாவது தடவையாக நடாத்தப்பட்ட இரத்ததான முகாம், தெமட்டகொடை – அகில இலங்கை வை.எம். எம். ஏ. பேரவையின் வழிகாட்டலின் கீழ், திஹாரிய – அல் மஸ்ஜிதுல் அமீனிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை மற்றும் அத்தனகல்ல தொகுதிக்குட்பட்ட பௌத்த முஸ்லிம் சங்கங்கள் சிலவற்றின் அனுசரணையில், பள்ளிவாசல் மண்டபத்தில் (21) சனிக்கிழமை இடம்பெற்றது.
பள்ளிவாசல் தலைவர் “தேசமான்ய” அல் ஹாஜ் ஏ.சீ.எம். அல்வான் தலைமையின் கீழ், வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் ஏ. ஹமீத், பேரவையின் கொழும்பு – கம்பஹா மாவட்ட பணிப்பாளர் நசாரி காமில் ஆகியோரது கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில், மும்மதங்களையும் சேர்ந்த சுமார் இருநூறுக்கும் மேற்பட்டோர், தமது சுய விருப்பத்தின் பேரில் இரத்த தானங்களைச் செய்தனர்.
மத்திய கொழும்பு கிளை உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.