சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பல் ‘ஷி யான் 6’ கொழும்பு துறைமுகத்தை ஒக்டோபர் (25) வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கை வருவதை முன்னிட்டு, இந்தியா அதிருப்தி தெரிவித்திருந்ததுடன், இதன் காரணமாக சர்ச்சைக்குரிய சூழல் ஒன்று உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் கப்பலின் வருகைக்கு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தன.
இலங்கை வரும் சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பல் ‘ஷி யான் 6’ நாரா நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடும்.
இதற்கமைய ‘ஷி யான் 6’ கப்பல் சுமார் 25 நாட்கள் இலங்கையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.