கொழும்பு
மண்சரிவு அபாயம் காரணமாக பசறை – ஹிங்குருகடுவ வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக மண் மேடுகள் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால் கொடமுதுன பிரதேசத்தில் வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது நிலவும் அபாயத்தை கருத்திற் கொண்டு குறித்த வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது