கொழும்பு
லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
சம்பா அரிசி, கொண்டைக்கடலை, உளுத்தம் பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை ரூ. 6 இனாலும் , ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 6 ரூபாவினாலும், பருப்பு கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், சிவப்புஅரிசி கிலோ 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதிய விலைகள் வருமாறு
சம்பா அரிசி கிலோ 222 ரூபாவாக உள்ளது.
ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 549 ரூபாவாகும்.
ஒரு கிலோ பருப்பின் விலை 295 ரூபாவாகும்.
சிவப்பு அரிசி கிலோ 169 ரூபாய்.