கொழும்பு:
கால்நடைகளை திருடுவதற்கான அபராதத்தை ஒரு மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதன் மூலம் விலங்குகள் நலச்சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் கறவை மாடுகளின் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ள நிலையில் விவசாய அமைச்சரினால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய விலங்குகள் நலச் சட்டத்தின்படி மாடு திருடப்பட்டால் அதிகபட்ச அபராதம் 50,000 ரூபாய் என்றும், அந்தக் குற்றத்திற்கான சிறைத்தண்டனை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
கால்நடை அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு கால்நடை பாதுகாப்பு சட்டத்தில் 10 இலட்சம் ரூபா வரை அபராதம் விதிக்கும் சரத்துக்களை உள்ளடக்கி கால்நடை அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.