சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திஹாறிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் 2003(O/L)ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் மற்றும் 2006(A/L)ஆம் ஆண்டு உயர்தரத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களின் இணைந்த ஏற்பாட்டில் தமக்கு தரம் ஒன்று தொடக்கம் பதிமூன்று வரை கற்பித்த ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு செய்யும் முகமாக கௌரவிப்பு ஒன்று கூடல் இரு தசாப்தங்கள் கடந்து திஹாறிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியில் அண்மையில்
(21)இடம்பெற்றது.
திஹாறிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி தற்போது வேறு பாடசாலைகளில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களும்,இதே கல்லூரியில் தற்போது கடமையாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், தற்போது ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்தக் கல்லூரியில்2003 ஆம் ஆண்டு O/L மற்றும் 2006ம் ஆண்டு A/L கற்ற மாணவர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குடும்ப சகிதம் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் குறித்த 2003-2006 காலப் பகுதியில் கல்லூரியின் கல்வி செயற்பாடுகளை மேற்கொண்ட அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் ஞாபாகார்த்த சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இதன் போது தான் கல்வி கற்ற காலப் பகுதியில் இடம் பெற்ற நினைவு விடயங்களை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பகிர்ந்து கொண்டமை சிறப்பபம்சமாகும் திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பாடசாலை வரலாற்றில் தான் கல்வி கற்ற ஆசிரியர்களை இரு தசாப்தங்கள் கடந்தும் 2003 0/L மற்றும் 2006 A/L ஆண்டில் கல்வி கற்ற மாணவர்களின் நன்றியுணர்வு மிக்க முன்மாதிரியான இந் நிகழ்வு பலராலும் போற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .