கொழும்பு:
இவ் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் 168 வரை பதிவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார்.
மேலும் இவர்களில் 22 பேர் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 11,000 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2022 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் குறைந்தது 41% பாலியல் துஷ்பிரயோகத்தின் கீழ் வருகின்றன என்றார்.
அந்த வகையில், இந்த ஆண்டு செப்டம்பரில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, இது ஒரு அதிகரிப்பை காட்டுகிறது என்றும் கூறினார்.