ஏ.எஸ்.எம்.ஜாவித்
பெக்டூ ஸ்கூல் 2025 நிகழ்ச்சித்திட்டத்தின் ( Back-to-School Programme 2025 ) கீழ் இளம் பெண்கள் முஸ்லிம் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு, பேருவளை, மல்வானை, மாவனல்ல உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த வருமானம் குறைந்த முஸ்லிம், தமிழ் மற்றும் பௌத்த குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இளம் பெண்கள் முஸ்லிம் அமைப்பின் தலைவி தேசமான்ய பவாஸா தாஹா தலைமையில் வை.எம்.எம்.ஏயின் தலைமைக் காரியாலயத்தில் கடந்த சனிக்கிழமை (04) இடம் பெற்ற நிகழ்வில் கொழும்பு டைம்ஸ் பிரதம ஆசிரியர் முஹமட் றசூல்டீன், இன்டர் நெசனல் லயன்ஸ் கிளப்பின் முன்னாள் தலைவர் (யு.கே) ரிஸ்வி ரவுப், தெமடகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பி.ஏ.ஜயதிலக மற்றும் அமைப்பின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட அங்கத்தவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.