தமது வேடிக்கைத்தனமான அதிகார அரசியலின் புதிய நாடகத்தை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அரங்கேற்றியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையினுள் நடத்திய அபூர்வமான நபர்களிடையிலான மாற்றமே இந்த நாடகமாகும் என அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, எதிர்க்கட்சியும் நாட்டு மக்களும் தொடர்ந்தும் தோல்வியடைந்ததாக கூறிய சுகாதார அமைச்சரிடம் சுற்றாடல் அமைச்சை கையளித்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.
ஸ்மார்ட் நாட்டை உருவாக்குவதற்கு பதிலாக ஜில்மாட் நாட்டை உருவாக்குவதே தற்போது நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவர், ஜனாதிபதி உருவாக்க முயற்சிக்கும் ஸ்மார்ட் நாட்டின் வடிவம் இதுதானா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் சுகாதாரத் துறை வீழ்ச்சியடைந்தாலும்,அவரை நம்பி பாதுகாக்கப்பட்ட சுகாதார அமைச்சர், இன்று ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டு,113 பேரின் நம்பிக்கையை நிர்வாணமாக்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பொதுமக்களுக்கு அழுத்தம் கொடுத்து, குறுகிய நோக்கத்துடன் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து சர்வாதிகார அரசாங்கமாக தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதாக கூறி, ஜனநாயக விரோதமாக கொண்டு செல்லும் நிகழ்ச்சிநிரலை நிறுத்தி, உடனடியாக தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
October 24, 2023
0 Comment
214 Views