- பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க
இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு கடலோரப் பிரதேசம் மாசடைந்து அசிங்கமாகவும் துர்வாடை வீசும் நிலையில் இருந்தால் இங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையை பற்ற
வெளிநாடுகளில் எதைத் தெரிவிப்பார்கள் என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க நீர்கொழும்பு கடலோரப் பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டபோது கேள்வி எழுப்பினார்.
கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீர்கொழும்பு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோர் நீர்கொழும்பு கடற்கரை பூங்கா, கடலோர பிரதேசம், கருவாடு காய்த்தல் பகுதி மற்றும் மீன் விற்பனை நிலையம் என்பவற்றிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை செவ்வாய்க்கிழமை (31) பிற்பகல் மேற்கொண்டனர்.
இதன் போது நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ரசிக்கா மல்லவாரச்சி, நீர்கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் நிரைவேற்றுக் குழு உறுப்பினர் டாக்டர் ஹென்றி ரொஸாரியோ, சுற்றுலா அபிவிருத்தி சங்க தலைவர் ஹிளறி அரவ்வாவெல,அதன் செயலாளர் கிளயா பெரேரா மற்றும் உறுப்பினர்கள் இதில் இனைந்துகொண்டனர்.
கடற்கரை பூங்காவை சுற்றிப் பார்த்த பிரதி அமைச்சர்கள் அங்கு சிற்றுண்டி விற்பனையில் ஈடுபட்டுள்ள சிறு கடைகளுக்கு விலை மனு பெற்றுக்கொண்டது தொடர்பாக கேட்டறிந்தனர். கடற்கரை ஓரம் நெடுகிலுமுள்ள உல்லாச ஹோட்டல்கள் கடல் பக்கமாக காணிகளை அபகரித்து வேலி அமைத்துள்ளதாகவும், அவ்வேளிகள் காலத்துக்கு காலம் முன்னோக்கி நகர்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. காணிகளை மீண்டும் உரிய முறையில் அளவீடு செய்து கடலோர பாதுகாப்பு அதிகார சபைக்குரிய காணிகளை விடுவிக்குமாறு பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டதுடன் குறிப்பாக நிமல் லான்சாவின் காணியையும் அளக்குமாறு கூறினார். நாம் தொலைபேசி அழைப்பு களை எடுக்கவோ தடுத்து நிறுத்தவோ எமது பக்கத்தில் எவரும் முற்பட மாட்டார்கள் எனவும் கூறினார்.
கடற்கரை பூங்கா பொலிஸ் அரன் தொடர்பாக கேட்டறிந்த அமைச்சர்கள் அதற்கு தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தனர். கடல் போட் சவாரி நடத்துபவர்களுடன் பேசி அது சம்பந்தமாகவும் விளக்கங்களை பெற்றுக்கொண்டனர்.
நீர்கொழும்பு கொடுவ மைதானத்திற்கு பக்கத்தில் கடலோரத்தில் கருவாடு காய்த்தலில் ஈடுபட்டுள்ளதையும் மீன் விற்பனை நிலையத்தையும் அவதானித்த பிரதி அமைச்சர்கள் சூழல் மாசடைவவையும் எந்த சுகாதார முறைகளையும் பேனாமல் கருவாடு பரத்தப்பட்டுள்ளதையும் கண்டுகொண்டனர். மேலும் வடிகான்களில் கூலங்கள் தேங்கி நிற்பதையும் கழிவு நீர், கழிவுப்பொருட்கள் நேரடியாக கடலுக்கு விடப்பட்டுள்ளதையும், இவற்றைப் கழுவுவதற்காக சட்டவிரோத கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதையும் கூடியிருந்தவர்கள் சுட்டிக்காட்டினர். சில கட்டுமானங்கள் மிக அன்மையில் தேர்தலுக்குப் பின்னர் கட்டப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டது.
அப்பகுதி எங்கும் துர்வாடகை வீசுவதையும், கடலோரம் அசிங்கமாகவும், மாசடைந்திருப்பதையும் அக் குழுவினருக்கு அவதானிக்க முடிந்தன.
பிரதி அமைச்சர் ஜயசிங்க உடனடியாக அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதான பொது சுகாதார பரிசோதகரை ஸ்தலத்திற்கு வரவழைத்தார். இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது மாநகர சபையால் அனுமதி வழங்கப்படவில்லை என் தெரிவிக்கப்பட்டது.
பண்டிகை காலம் என்பதால் கூலங்கள் தேங்கிக்கிடக்கின்றன. இல்லாவிட்டால் அன்றாடம் அவை அகற்றப்படுவதாகவும் கூறினார்.
வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் நீர்கொழும்புக்கு வருகை தந்ததும் முதலில் வருவது இப் பிரதேசத்திற்கே. இவ்வாறான நிலையில் இப்பிரதேசம் இருக்கும் நிலையை அவர்கள் தமது நாடுகளில் வெளிப்படுத்தினால் எமது நாட்டின் நிலமை என்வாகும்? சுற்றுலா பயணிகளின் வருகையில் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஜயசிங்க கடலோரப் பிரதேசத்தை எப்போதும் ஆழகாகவும் சுத்தமாகவும் துர்வாடை இன்றியும் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது எனவும் கூறினார்.
கடலோரத்தில் கருவாடு காய்த்தல் தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளையும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து உரிய தீர்மாணங்களை எடுக்க வேண்டும் என்றார்.