இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்ஜய பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு நாளை மறுதினம் கூடவுள்ளது.
பாராளுமன்ற கட்டிட தொகுதியில் குறித்த குழு கூடவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்போது, சம்பவம் இடம்பெற்ற இடத்திலுள்ள CCTV காணொளிகளை மையமாக கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திலுள்ள வாசிகசாலைக்கு அருகில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்ஜய பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கிடையே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.