இஸ்மதுல் றஹுமான்
சீதுவ, லியகேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம் இருவர் வைத்திய சலையில் அனுமதி.
28.12.2024 இரவு மோட்டார் காரில் வந்த சிலர் இந்தச் துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மூவர் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்டு சற்று நேரத்தில் 53 வயது நபர் மரணமடைந்தார். அவரின் தந்தையும் சகோதரரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மோட்டார் காரில் வந்தவர்கள் துப்பாக்கிச்சூட்டை நடாத்திவிட்டு காரை கோவின்ன பிரதேசத்தில் கைவிட்டுச் சென்ற நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அங்கிருந்து வேறொரு வாகனத்தில் இந்தக் கோஷ்டி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தக் குழுவில் பெண் ஒருவர் இருந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்காக விஷேட சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.