அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
அவர் பதவியேற்பதற்கு முன்னதாக, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களை குளிர்கால விடுமுறையிலிருந்து திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளன.
பல அமெரிக்கக் பல்கலைக்கழக வளாகங்களில் பதற்ற நிலை உருவாகக்கூடும் என்பதால் இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
2023-2024ஆம் கல்வியாண்டில், 1.1 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றுள்ளனர்.
ஆனால், டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியவுடன், தனது முன்னைய பயணத் தடையை விரிவாக்குவது உட்பட, கடுமையான குடியேற்றக் கொள்கைகளைக் கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்கள் குடியுரிமை அல்லாத விசாக்களையே கொண்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் அமெரிக்காவின் சர்வதேச மாணவர்களுக்கு இருண்ட காலம் ஆரம்பமாகும் என சர்வதேச மாணவர்கள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.