குரங்குகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிவர்த்தி செய்ய குரங்குகளை தனித்தீவு ஒன்றிற்கு கொண்டு போய் சேர்க்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட ஆளும் தரப்பு எம் பி துஷாரி ஜயசிங்க குறிப்பிட்டார்.
ரத்தனிகல பிரதேசத்தில் அதற்கான ஒரு தீவு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் குரங்குகளை பிடித்து அந்த தீவில் விடும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளதாக கூறினார்.
கூண்டுகளில் குரங்குகளை பிடித்து குறித்த தெரிவு செய்யப்பட தீவில் கொண்டு சேர்த்து குரங்குகளுக்கு கருத்தடை செய்ய திட்டமிட்டு அங்கு விடப்படும் என அவர் கூறினார்.