கொழும்பு
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒக்டோபர் (21) நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது அவர் உபாதைக்கு உள்ளாகினார்.
இன்று நடத்தப்படும் ஸ்கேன் பரிசோதனைக்குப் பிறகே எதிர்கால போட்டிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அணயின் தலைவர் தசுன் சானக மற்றும் மதீச பத்திரன ஆகியோர் ஏற்கனவே உபாதைக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.