ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்று நேற்றைய தினம்
மல்லியப்பு சந்திக்கருகில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது. இதன்போது பாதிக்கப்பட்டவர்களை கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுஷா சந்திரசேகரன் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
இது போன்ற விபத்துகள் இங்கு அடிக்கடி இடம்பெறுவது வேடிக்கையாகிவிட்டது. இதனால் கஷ்டப்படுவது எமது மக்களாக மட்டுமே இருக்கிறார்கள். உயிரிழப்புகள் காயங்களுக்கு உள்ளானவர்கள் என அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.
இந்த பஸ் சாரதியின் கவனக்குறைவால் தான் இந்த விபத்து நேர்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அது உண்மையாக இருப்பின் அந்த சாரதிக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறான பொதுப்போக்குவரத்து சேவைகளை வழங்குபவர்களும் எதிர்காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
நாட்டின் சட்டதிட்டங்கள் மக்களுக்காக, மக்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட தரப்பினர் அவற்றை சரியாக பயன்படுத்தி மக்களின் நலனை கருத்திற்கொண்டு செயற்படுவார்கள் என எதிர்ப்பார்க்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.