சட்டவிரோத நிதி முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்திய 20 நிறுவனங்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இவற்றில் சில நிறுவனங்களுக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி நுகர்வோர் உறவுகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மத்திய வங்கியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.