தற்போது அரிசி 22,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அரிசியை தற்போது பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும் 10,000 மெற்றிக் தொன் அரிசி கிடைக்கவுள்ளதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சந்தையின் தேவையைக் கருத்தில் கொண்டு அரிசி இறக்குமதிக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப் பகுதியை நீடிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
“உள்நாட்டு விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாதவாறு அரிசி இறக்குமதி மேற்கொள்ளப்படுகின்றது. இந்த செயற்பாடு சில கட்டுப்பாடுகளுடனே இடம்பெறுகின்றது ” என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.