கொழும்பு
எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியங்க சில்வா தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான எஹெலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாதுவ பிரதேசத்தில் வசிப்பவர் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறிப்பட்டாத நிலையில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.