மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் உள்ள The Traveller Global கிளை அலுவலகம் மேம்பட்ட சேவைகளுடன் மட்டக்களப்பில் அதிநவீன சூழலில் திங்கட்கிழமை, டிசம்பர் திறந்து வைக்கப்பட்டது.
புதிய அலுவலகத்தை The Traveller Global நிறுவனத்தின் பணிப்பாளர்/தலைமை நிர்வாக அதிகாரி Rifard Rizmi, அதன் தலைமைச் செயற்பாட்டு அதிகாரி Arafath Riza மற்றும் புதிதாக திறக்கப்பட்ட அலுவலகத்தின் கிளை முகாமையாளர் Mohamed Rikaas ஆகியோர் முன்னிலையில் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.
“பயண மற்றும் சுற்றுலாத் துறையில் ஒரு தசாப்த கால சேவையை நிறைவுசெய்துள்ள நிலையில், சுற்றுலா, ஹோட்டல் சேவைகள் மற்றும் மதச் சுற்றுலா போன்றவற்றில் சிறந்த சேவைகளை வழங்குவதற்கான உறுதிமொழியுடன், மட்டக்களப்பில் உள்ள The Traveller Global உத்தியோகபூர்வமாக மீண்டும் திறக்கப்பட்டது” என்று Rifard Rizmi கொழும்பு டைம்ஸ் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்த அலுவலகம், இல. 373, திருகோணமலை வீதி, மட்டக்களப்பு என்ற முகவரியில் அமைந்துள்ளது, இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிறந்த சேவைகளை வழங்குவதாக உறுதியளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதிய ,நவீன தோற்றத்தைக் கொண்டுள்ளது.
இந்த மறுசீரமைப்பு சிறப்பான புதிய அத்தியாயத்தை குறிக்கிறது, வாடிக்கையாளர் சேவைக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை வழங்குகிறது மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு நேர்த்தியான சூழ்நிலையை வழங்குகிறது.